ஈஷா யோகா மைய ரதம் ஊட்டி வருகை

ஈஷா யோகா மைய ரதம் ஊட்டி வருகை

Update: 2023-02-17 10:48 GMT

ஊட்டி

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை) நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் சிவராத்திரி மகத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ஆதியோகி சிவன்ரதமும், 63 நாயன்மார்கள் அடங்கிய ரதமும் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி 20-ந் தேதி புறப்பட்ட ரதம் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தது.

அங்கு மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான பக்தர்கள் ரகத்தில் இருந்த சிவனை வழிபட்டனர். மொத்தம் 650 கிராமங்களில் இதுவரை சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளதாகவும் நாளை, (இன்று) ஈஷா யோகா மையத்துக்கு செல்வதாகவும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்