கண் பார்வை இழப்பு தடுப்பு விழிப்புணர்வு
நெலாக்கோட்டையில் கண் பார்வை இழப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் குருட்டுத்தன்மை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் கிருஷ்ணன், ஊட்டி பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவகுழு சார்பில் அந்தோணியம்மாள், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பார்வை இழப்பு ஏற்படுவதை தடுப்பது குறித்தும், கண் நலன் பாதுகாப்பதற்கு வழிமுறைகள், கண் பாதிப்புகள் ஏற்பட்டால் பெறக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார்.