விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2023-09-11 11:39 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி

விநாகயர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு செய்கிறார்கள். பொதுமக்கள், அமைப்பினர்களால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத விநாயகர் சிலைகள் மட்டும் விசர்ஜனம் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக நீர்நிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகள்

மாவட்டத்தில் சாமளாபுரம் குளம், ஆண்டிப்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால், பொங்கலூர் பி.ஏ.பி. பிரதான வாய்க்கால், உடுமலை அருகே எஸ்.வி.புரம் வாய்க்கால், எஸ்.வி.புரம் பி.ஏ.பி. வாய்க்கால், கணியூர் அமராவதி ஆறு, உடுமலை அருகே கெடிமேடு பி.ஏ.பி. வாய்க்கால் ஆகிய 7 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய எடுத்துச்செல்ல வேண்டும். பொதுமக்கள், இந்து அமைப்பினர்கள் இதை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்