விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

செஞ்சியில் நாளை நடக்கிறது விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

Update: 2022-09-19 18:45 GMT

செஞ்சி

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நாளை(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட அவை தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்