கிராம மக்கள் சாலைமறியலுக்கு முயற்சி

திசையன்விளை அருகே கிராம மக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர்.

Update: 2022-07-18 19:34 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உறுமன்குளம் பஞ்சாயத்து குளக்கரையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் குருகாபுரத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் உறுமன்குளம் பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பஞ்சாயத்து தலைவர் வைகுண்டம் பொன் இசக்கி தலைமையில் உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்டைகுளத்தில் திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர். உடனே அவர்களிடம் தாசில்தார் செல்வகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குருகாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

அதன்பிறகு உறுமன்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அவசர கூட்டம், தலைவர் வைகுண்டம் பொன் இசக்கி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு குழாய் மூலம் குருகாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல பெறப்பட்ட அனுமதியை ரத்து செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்