அலுவலகத்தை திறக்காத வருவாய் ஆய்வாளரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்ராமநத்தம் அருகே பரபரப்பு

ராமநத்தம் அருகே அலுவலகத்தை திறக்காத வருவாய் ஆய்வாளரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-09 19:00 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள ஆவட்டி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அன்றைய தினமே பூட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் அலுவலகத்தை திறக்காத வருவாய் ஆய்வாளரை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்