ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

Update: 2022-08-09 14:03 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக ஆலையை அரசு மூட உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ஆலையை திறக்க கோரி மனு கொடுத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் டி.குமாரகிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் வேலையின்றி தவித்து வருகின்றனர். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எங்கள் கிராமத்துக்கு கிடைத்து வந்த பல திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்