அரசு கலைக்கல்லூரியில் மீண்டும் எம்.பி.ஏ. வகுப்பு தொடங்க வேண்டும்- கிராமப்புற மாணவர்கள்

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் மீண்டும் எம்.பி.ஏ. வகுப்பு தொடங்க வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-15 19:15 GMT

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் மீண்டும் எம்.பி.ஏ. வகுப்பு தொடங்க வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு கல்லூரி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி. போன்ற பட்டப் படிப்புகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கல்லூரியில் எம்.பி.ஏ. வகுப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு (2022) வரை எம்.பி.ஏ. வகுப்புகள் இங்கு நடந்து வந்தன. இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இதையடுத்து எம்.பி.ஏ. படிப்பு கல்லூரியில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தற்போது மாணவ, மாணவிகள் 1,270 பேர் படித்து விருகின்றனர். இதில் 1,100 பேர் மாணவிகள் ஆவர்.

கிராம மக்கள் கவலை

மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பட்டப்படிப்பு படித்து வரும் இந்த கல்லூரியில் எம்.பி.ஏ. வகுப்புகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் கவலையில் உள்ளனர். பெரும்பாலான மாணவிகள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வெகு தொலைவில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.

எம்.பி.ஏ. படிப்பதற்கு தொலைதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டு இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே இந்த கல்லூரியில் மீண்டும் எம்.பி.ஏ. வகுப்புகளை தொடங்க வேண்டும் என கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்