விழுப்புரம் மாவட்டத்தில்தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-28 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுகாதாரமான குடிநீர் வினியோகத்தை உறுதிசெய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், கிராம சாலை திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்