கிராம சபை கூட்டம்

பனங்காட்டேரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்்தது.

Update: 2023-05-01 18:01 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி கிராமத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்ப தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 12 இருளர் இன மக்களுக்கு தலா ரூ.5.20 லட்சம் வீதம் ரூ.62.40 லட்சத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.4,059 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.

ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, உதவி இயக்குனர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்