திருக்கோவிலூர் அருகேகனகநந்தல் கிராமத்தில் கிராம சபை கூட்டம்

திருக்கோவிலூர் அருகே கனகநந்தல் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-11 18:45 GMT


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் கனகனந்தல் கிராமத்தில் 2020- 2021 மற்றும் 2021 -2022 -ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் எஸ்.பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.மனோகரன், வட்டார வள அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜி.ராஜி வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள்.

ஊராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் தவிர்த்து, தேவைப்படும் பணிகள் குறித்தான பட்டியலை மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக சமர்ப்பித்து கூடுதல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தொிவித்தார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கனகாம்பரம் விமலாதேவி, பழனியம்மாள், மஞ்சு, கோமதி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலாளர் கே.ஏ.மதியரசன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்