கிராம சபை கூட்டம்

கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

கரியாப்பட்டினம்:

வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். இதில் 10 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டையும், 16 தூய்மை பணியாளர்களுக்கு கையுறையும், 16 பேருக்கு மழை கோட்டும்,5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்களும், 12 பேருக்கு இடுப்பொருட்களும், 5 பேருக்கு விவசாய கடனும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு மருந்து பெட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்