கிராம சபை கூட்டம்

தகட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் ரேகா, கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அன்புராஜ் வரவேற்றார். இதில் தகட்டூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தா, விஜயலட்சுமி, பூங்குழலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோகிலதாஸ் நன்றி கூறினார். இதேபோல தாணிக்கோட்டகம் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் அருள் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் திருமறைச் செல்வன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்