உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-01 18:45 GMT

உள்ளாட்சி தினத்தையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தினம்

உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை மற்றும் நகர சபை கூட்டம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு பகுதியில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா வரவேற்றார். நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் சக்திவேல், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் மின்சாரம், குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி தெரிவித்தார்.

காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சி சார்பில் ஆவுடைபொய்கை கிராமத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆறு.முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் பவதாரணி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம்

கொல்லங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். மறவமங்கலம் ஊராட்சியில் மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சாந்தா ராணி கலந்து கொண்டார். இதில், ஊராட்சி செயலர் ஜான்சி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பருத்திக்கண்மாய் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜவகர் ராயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கவுன்சிலர் ஸ்டெல்லா, ஊராட்சி செயலாளர் ஆரோக்கியம் கலந்து கொண்டனர்.

காளக்கண்மாய் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் திருவருள்செல்வி சங்கையா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் மதனகோபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். காளையார் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின்மேரி அருள்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி செயலாளர் காளீஸ்வரன், ஊராட்சி துணைத்தலைவர் சிவசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பரிசு

எஸ்.புதூர் அருகே கே.நெடுவயல் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதையொட்டி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பொன்னுச்சாமி செய்திருந்தார்.

கிழவயல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அருண்பிரசாத், வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன், கரிசல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஷாஜகான், மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜோதி பித்திரை செல்வம், உலகம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சியாமளா கருப்பையா, புழுதிபட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லெட்சுமி சண்முகம், எஸ்.புதூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

திருப்புவனம்

திருப்புவனம் பேரூராட்சி 10, 11 ஆகிய வார்டுகள் சார்பாக பழையூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சித்ராதேவிஆறுமுகம், வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், செயல் அலுவலர் ஜெயராஜ், இளநிலை உதவியாளர் நாகராஜன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிரங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் மல்லிகா ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இதில், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன், தாசில்தார்கள் கண்ணன், தனலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, ஈஸ்வரன், சுப்பையா, ஊராட்சி மன்ற துணை தலைவர் அய்யம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்