கிராம சபை கூட்டம்
காந்திஜெயந்தியை முன்னிட்டு ஜெயங்கொண்டான், வி.புதூர், விட்லாபுரம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
செஞ்சி
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜெயங்கொண்டான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது கிராம சபை கூட்டத்தின் மூலம் பொது மக்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கிராமத்தின் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு, பொது கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் அமைப்பது, கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்க கண்டறியும் பணியை செய்வது, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிவறை கட்டிடம், சுற்று சுவர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பொது மக்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது ஒரு சிறுமி எங்கள் ஊருக்கு நடுநிலைப்பள்ளி வேண்டும் எனவும், ஒரு பெண் எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்கழுமலை, வேளாண்மை துறை துணை இயக்குனர் செல்ல பாண்டியன், தனி தாசில்தார் ரங்கநாதன், துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தேசிங்கு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
புகழேந்தி எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஒரத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான நா.புகழேந்தி கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் தாசில்தார் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாஅரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், முருகவேல், மாவட்ட கவுன்சிலர் மீனாவெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், நளினி ஜெயச்சந்திரன், செல்வம், சாவித்திரி பாலு, கிளை செயலாளர்கள் சுதாகர், கோபிகிருஷ்ணன், இலியாஸ், மோகன், குப்பு மற்றும் அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
லட்சுமணன் எம்.எல்.ஏ.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வி.புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கிராம மக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசும்போது, நம் பகுதியை குப்பையில்லாமல் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை. இளைய சமுதாயம் நல்வழியில் செல்ல போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். உங்கள் பகுதியில் யாரேனும் போதைப்பொருட்களை விற்பனை செய்தால் அதுபற்றி அரசு அதிகாரிகளுக்கோ அல்லது போலீஸ் நிலையங்களுக்கோ தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வூராட்சியில் சமுதாய நலக்கூடம், கருமகாரிய கொட்டகை, பொது கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் வாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாமலையாளம், துணைத்தலைவர் செல்வக்குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், வேளாண் அலுவலர் ராதிகா, கிராம நிர்வாக அலுவலர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் சரண்யாவிஜி, ராஜாமணி, செல்வக்குமார், கிளை நிர்வாகிகள் வக்கீல் கண்ணப்பன், ராஜசேகர், ராமநாதன், பூங்குன்றம், துளசிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விட்லாபுரம் ஊராட்சி
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விட்டலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சீலாதேவி சேரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.சேரன், ஒன்றிய செயலாளர் சிந்தனை வேந்தன், பொருளாளர் சந்திரசேகர், காமராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி துணை அலுவலர், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், மரக்காணம் வட்டார கல்வி அலுவலர், வேளாண்மை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.