கிராம நிர்வாக அலுவலர்களை தாசில்தார் கண்காணிக்க வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கிராம நிர்வாக அலுவலர்களை தாசில்தார் கண்காணிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-04 13:15 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அளவில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் அலுவலக நாட்களில் வருவதில்லை என புகார்கள் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக பணியிடம் ஏற்படும் மற்றும் கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலும் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களிலும் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்களின் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திப்பதில் சிரமங்களை தவிர்க்கும் விதமாகவும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டறியப்படும் விதமாகவும் மேற்படி பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதை தவிர்க்கும் விதமாகவும் இனிவரும் நாட்களில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களில் கூடுதல் பொறுப்பு கவனித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட தினங்களில் முறையாக செல்வதை திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த சம்பந்தப்பட்ட உட்கோட்ட நடுவர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் முறையாக கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்