விழுப்புரத்தில்கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டம்

விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-08 18:45 GMT


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் விழுப்புரம் வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தொடக்கமாக விழுப்புரம் வட்ட சங்கத்தேர்தல் நடந்தது. இதில் வட்டத்தலைவராக நந்தகுமார், செயலாளராக மணவாளன், பொருளாளராக அய்யனார், வட்ட மகளிர் அணி செயலாளராக சுமதி, வட்ட துணைத்தலைவராக ராஜி, இணை செயலாளராக பாரதிதாசன், துணை செயலாளராக மாணிக்கம், ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ்செல்வன், கவுரவ தலைவர்களாக உமாபதி, ரபீக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்சாரம், இணையதள வசதி, குடிநீர், கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும், புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவியை டெக்னிக்கல் பதவியாக மாற்ற வேண்டும், இப்பதவிக்கு பட்டப்படிப்பை தகுதியாக வைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் உட்பிரிவு பட்டா மாற்ற கோப்புகளை கிடப்பில் போட்டு, பாரபட்சமாக தாமதம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்