கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட இணை செயலாளர் நாகராஜன், வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் விஜயராஜா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வரதராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிர்வாக பயிற்சியை உடனடியாக நடத்துவது, இ.அடங்கல் குறைபாடுகளை நீக்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கலையரசன், ஜெயலட்சுமி, சண்முகப்பிரியா, மணிகண்டன், பிரபாகரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.