கிராம நிர்வாக அலுவலர் கொலை:மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிராம நிர்வாக அலுவலர் கொலை பின்னணியில் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் அய்கோ தலைமையில் திருச்செல்வம், கிருஷ்ணன், பால் அண்ணாத்துரை, ஜெயராணி, பொன்ராணி உள்ளிட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 'முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் கொள்ளையை தடுப்பதற்காக சிறப்பு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.