விஜயகரிசல்குளம் அகழாய்வு பணி மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வு பணி மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-09-30 01:53 IST

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அதனை அரங்கில் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. இதனை தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தற்போது வரை 20,500-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 18 குழிகளில் 12 குழிகள் 10 அடி முதல் 13 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு குழிகள் முழுமை அடையாத காரணத்தினால் அரசின் அனுமதி பெற்று மேலும் 3 வாரம் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற அனுமதி பெறப்பட்டுள்ளது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 4,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது முதலாம் கட்ட அகழாய்வை விட கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.எனவே மேலும் 3 வாரம் பணி தொடர அரசு அனுமதி வழங்கி உள்ளதால் மேலும் கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். குழியில் இருந்து தோண்டப்பட்ட மண்ணை சலிக்கும் பணி, விலங்கின் எலும்புகள், பானையோடுகள் சுத்தம் செய்யும்பணி, அறிக்கை தயாரிக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்