விஜயகாந்த் பிறந்தநாள்: மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-25 05:55 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிகவின் நிறுவனருமான தெய்வத்திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பத்ம பூஷன் விஜயகாந்த்'அவர்களின் பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்