ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை வரவேற்கிறேன் - விஜயகாந்த்

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-09 07:56 GMT

சென்னை:

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது,

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் தொடர் கதையாகி வந்தது. பல குடும்பங்கள் பணத்தை இழந்து வறுமையில் சிக்கி தவித்து வந்தன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தேன்.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதனை தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தது.

அந்த அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன். பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் தடை விதிக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் தடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்