கனகநந்தல் கிராமத்தில் விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கனகநந்தல் கிராமத்தில் விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-10-28 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள கனகநந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை யாக வேள்வி பூஜை, வேத பாராயணம், தீபாராதனை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, நாடி சந்தானம், மூல மந்திர ஹோமம், விசேஷ தீபாராதனையுடன் முதல் 3 கால யாக சாலை பூஜைகளுடன் புனிதநீர் கலசம் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு விஜய விநாயகர் கோவில் கோபுர விமானம் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு வாணவேடிக்கையுடன் விஜய விநாயகர் வீதி உலா காட்சி மற்றும் இசைக்கச்சேரி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்