மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா
மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா
மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் பிரதீபா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நெப்போலியன், ஊராட்சி மன்ற தலைவர் சாம்ப சிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆண்டு அறிக்கையை உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் வாசித்தார். இதில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபால், மதுக்கூர் ஆசிரியர் பயிற்றுனர் பிரகாஷ், மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் மனோகரன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாதுைர எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.