கோர்ட்டு நடவடிக்கையை வீடியோ எடுத்தவர் கைது
கோர்ட்டு நடவடிக்கையை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டார்
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கூடுதல் மகிளா கோர்ட்டில் நேற்று முன்தினம் மதியம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது கோர்ட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கோர்ட்டு நடவடிக்கைகளை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து கூடுதல் மகிளா கோர்ட்டு தலைமை கிளார்க் ஹேமா செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வீடியோ பதிவு செய்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், எடமலைப்பட்டிபுதூர் பிள்ளையார்கோவில்தெருவை சேர்ந்த முகமதுஅலி (வயது 35) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமதுஅலியை கைது செய்தனர்.