நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பாக திருக்காடுதுறையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார் தலைமை தாங்கினாா். கால்நடை பராமரிப்புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி முன்னிலை வகித்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர். இதில் கால்நடைகளுக்கு வெறிநாய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை, மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளும், விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதும் வழங்கப்பட்டது.