கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
ராமநாதபுரம் காலனியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சி, ராமநாதபுரம் காலனியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
முகாமில் படவேடு கால்நடை மருத்துவர் விஜய்காந்த், கால்நடை ஆய்வாளர் வேலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 350 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.
பசுக்களின் உரிமையாளர்களிடம் தாது உப்பு பாக்கெட்டுகளை வழங்கப்பட்டது. 258 கால்நடைகள் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது
இதில் .துணைத்தலைவர் தாமரைச்செல்விஆனந்தன், பால் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வராஜ், டி.வி.எஸ். அறக்கட்டளை தன்னார்வலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.