குன்னூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

குன்னூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

Update: 2023-01-19 18:45 GMT

குன்னூர்

குன்னூர் ஒன்றியம் எடப்பள்ளி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட கோடமலை பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா கலந்துகொண்டார். முகாமில் பங்குபெற்ற அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கைமுறை கரூவூட்டல், மலடுநீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய்தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் பங்குபெற்ற கன்றுகளில் 3 சிறந்த கிடேரி கன்று உரிமையாளருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநர் பார்த்தசாரதி மேற்பார்வையில் எடப்பள்ளி, கால்நடை உதவி மருத்துவர் செ.சதீஸ்குமார் முன்னிலையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்