கால்நடை மருத்துவ முகாம்
ஆலம்பூண்டியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
செஞ்சி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அளவிலான கால்நடை மருத்துவ முகாம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் வரவேற்றார். துணை பதிவாளர் பால்வளம் ஸ்ரீகலா, ஆவின் துணை பொதுமேலாளர் டாக்டர் அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர் துரைமுருகன் முகாம் விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கால்நடை குறித்த கண்காட்சியியை பார்வையிட்டார். மேலும் அவர், சிறந்த கன்றுகளை வளர்த்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார்.
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி ஆலம்பூண்டி கிராம வங்கி கிளை மேலாளர் சிவசங்கரன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், டிலைட், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் சேகர், பால் கூட்டுறவு சங்க தலைவர் குண்டு ரெட்டியார் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். இதனை தொடா்ந்து ரூ.67 லட்சம் மதிப்பில் நடுப்பட்டு முதல் கூடப்பட்டு வரை புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.