கால்நடை மருத்துவ முகாம்
சென்னாவரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
வந்தவாசி
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வந்தவாசி வட்டார கால்நடை மருத்துவமனை மூலம் வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி மன்றத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.
முகாமில் டாக்டர்கள் விஜயகுமார், சரவணகுமார் கால்நடை மருத்துவ உதவியாளர் மகாலட்சுமி அடங்கிய மருத்துவ குழுவினர் 500 ஆடு, மாடு, கோழி, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
மேலும் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, நாய்களுக்கு தடுப்பூசி, கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பு மருந்து உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த சிறப்பு முகாமில் சென்னாவரம், பாதிரி, பிருதூர், மங்கநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.