குலதீபமங்கலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

குலதீபமங்கலம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-27 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகர அரிமா சங்கம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமில் திருக்கோவிலூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர்கள் நரேந்திரன், பொம்மி, உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மோகன், பாஸ்கரன், சக்தி உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு 650-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்ததோடு, கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கால்நடைகளை சிறப்பாக பராமரித்த நபர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் அதன் நிர்வாகி அரகண்டநல்லூர் லட்சுமி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.ராஜா சுப்பிரமணியம் பரிசு வழங்கி பாராட்டினார். முகாமில் குலதீபமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, துணை தலைவர் பார்த்திபன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்