திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்வேணுகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் வீதிஉலா :திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.

Update: 2023-09-11 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் உள்ள பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமிக்கு ஸ்ரீ ஜெயந்தி மகோற்சவம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதைமுன்னிட்டு கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நேற்று முன்தினம் காலை நாச்சியார் திருக்கோலம், மதியம் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர், இரவில் தங்க கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் வேணுகோபாலசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று காலை சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், மதியம் அலங்கார திருமஞ்சனமும், இரவில் யானை வாகனத்தில் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து வருகிற 15-ந்தேதி வரை உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கோவில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்களும், உபயதாரர்களும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்