அன்னூரில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அன்னூரில் தனியார் வங்கியில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-22 18:45 GMT


அன்னூரில் தனியார் வங்கியில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் வங்கியில் கொள்ளை

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் ஐ.டி.எப்.சி. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வழக்கம்போல் வங்கிக்கு ஊழியர்கள் வந்து பார்த்தபோது வங்கியின் கதவு திறந்து கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. மேலும் 17 கிராம் நகையும் மாயமானதாக தெரிகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அன்னூர் போலீசார் கொள்ளை நடந்த வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர்கள். வங்கியில் எந்த ஒரு கதவும் உடைக்கப்படவில்லை. அப்படி இருக்கும் நேரத்தில் எப்படி வங்கிக்குள் வைத்திருந்த நகை-பணம் காணாமல் போனது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்