வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவர் அமுதாஞானசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஸ்வரிகாசி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட்ரமேஷ்பாபு வரவேற்றார். கூட்டத்தில் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் வினோத் நன்றி கூறினார்.