வேலூர் டவுன் ஹால் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

வேலூர் டவுன் ஹால் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-09-27 16:38 GMT

வேலூர் டவுன் ஹால் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான டவுன் ஹால் உள்ளது. அதன் அருகே பழமையான சங்கீத சபாவும் உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

டவுன் ஹாலை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் செந்தில்குமார், சுகாதார அலுவலர் லூர்துசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசுக்கு சொந்தமான டவுன் ஹால் பொதுமக்களின் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பின்னர் குறைந்த வாடகைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். வணிக நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படாது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதேபோல சங்கீதசபா இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடத்தில் புதிய அரங்கம் பெரியதாக கட்டப்படும். அந்த அரங்கமும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன் இடத்தை முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்