சாலையில் மூங்கில்கள் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிப்பு

கூடலூரில் பலத்த மழை காரணமாக சாலையில் மூங்கில்கள் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-30 20:45 GMT

கூடலூரில் பலத்த மழை காரணமாக சாலையில் மூங்கில்கள் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் தேவர்சோலையில் இருந்து தேவன் பகுதிக்கு செல்லும் சாலையோரம் நின்றிருந்த மூங்கில்கள் நேற்று மாலை 3 மணிக்கு சாய்ந்து விழுந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அடிக்கடி மின்தடை

இதையடுத்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மூங்கில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இருந்தாலும், தொடர்ந்து வீசிய காற்று காரணமாக கூடலூர் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இது தவிர தொடர்ந்து காற்று மற்றும் மழை நீடிப்பதால் கூடலூர் பகுதியில் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்