கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்; 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

கொடைக்கானலில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2022-05-28 16:13 GMT

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். வாரவிடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே வாகனங்களில் படையெடுத்தனர்.

இதன்காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் நகர் பகுதி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். பலர் வாகனங்களிலேயே முடங்கினர். கடந்த சில தினங்களாக அங்கு தொடர்மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவியது.

இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடி நடமாடினர். இதனால் ஸ்வெட்டர்கள், சால்வைகள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்