குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளதா? என்பது குறித்த வாகன கூட்டாய்வு குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த ஆய்வில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் குறைகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்த சோதனையினை மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.