திருப்பூரில் காய்கறிகள் விலை சரிவு
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சமீப காலமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைவாக உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பாகற்காய் ரூ.30, மேரைக்காய் ரூ.30, பவானி கத்தரி ரூ.50, வரி கத்தரி ரூ.30, சுரைக்காய் ரூ.20, வெண்டை ரூ.30 முதல் ரூ.50, ஊட்டி உருளை ரூ.70, சாதா உருளை ரூ.30, ஊட்டி பீட்ரூட் ரூ.50, சாதா பீட்ரூட் ரூ.25, பச்சை மிளகாய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.20, பூசணிக்காய் ரூ.20, அரசாணிக்காய் ரூ.25, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.90, சேனைக்கிழங்கு ரூ.60, கருைணக்கிழங்கு ரூ.70, கோவைக்காய் ரூ.30, கொத்தவரங்காய் ரூ.40, அவரை ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. இதில் இஞ்சி(பழையது) மட்டும் அதிக விலையாக ரூ.300, புதியது ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.