கோபி உழவர் சந்தையில் செப்டம்பர் மாதம் ரூ.82½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

கோபி உழவர் சந்தையில் செப்டம்பர் மாதம் ரூ.82½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

Update: 2023-10-01 22:13 GMT

கோபி

கோபி அருகே மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாதிபாளையம், சுண்டப்பாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் மற்றும் கோபியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 883 விவசாயிகள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 692 கிலோ காய்கறியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவைகள் ரூ.82 லட்சத்து 49 ஆயிரத்து 774-க்கு விற்பனையானது. இதனை நுகர்வோர்கள் 30 ஆயிரத்து 988 பேர் வாங்கி சென்றனர். இந்த தகவலை கோபி உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்