கும்பகோணத்தில் காய்கறி விலை உயர்வு

கும்பகோணத்தில் காய்கறி விலை உயர்வு

Update: 2023-08-19 19:20 GMT

2 நாட்கள் முகூர்த்த தினத்தையொட்டி கும்பகோணத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விற்பனை

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதேபோல் கும்பகோணத்தை சுற்றியுள்ள வயல் பகுதிகளில் விலையும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி கொண்டு கும்பகோணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.

விலை அதிகரிப்பு

கடந்த மாதம் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. தற்போது சுப முகூர்த்த தினங்கள் என்பதால் கும்பகோணத்தில் காய்கறிகள் விலை அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு காய்கறிகளும் கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. நேற்று தாராசுரம் மாா்க்கெட்டில் 1 கிலோ உருளை கிழங்கு ரூ.22-க்கும், பல்லாரி ரூ.28-க்கும், கேரட் ரூ.60-க்கு விற்பனையானது.அதேபோல் கடந்த வாரம் ரூ.45-க்கு விற்பனையான கத்தரிக்காய் நேற்று ரூ.70-க்கு விற்பனையானது. தக்காளி ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது. பச்சை மிளகாய் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.4 அதிகரித்து ரூ.45-க்கு விற்பனையானது. ரூ.40-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.50-க்கும், ரூ.35-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.40-க்கும், இஞ்சி ரூ.250-க்கும், சின்னவெங்காயம் ரூ.55-க்கும் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்