வீரசக்கதேவி கோவில் வருசாபிஷேக விழா
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வீரசக்கதேவி கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம்:
ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரசக்கதேவி கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை மற்றும் வேள்வி பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து வீரசக்காதேவிக்கு பச்சரிசி மாவு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் வீரச்சகத்தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.