வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா
சங்கரன்கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.