வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

வேட்டைக்காரன்புதூர் அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

Update: 2022-10-20 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை அடுத்துள்ள வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், ஜோதிமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜாக்கண்ணு முன்னிலை வகித்து போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழியை வாசிக்கு மாணவ-மாணவிகள் எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்