மாணவர் சேர்க்கையின்போதுஅரசு கல்லூரி அலுவலர்களுடன்வி.சி.க.வினர் வாக்குவாதம்திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் மாணவர் சேர்க்கையின்போது, அரசு கல்லூரி அலுவலர்களுடன்வி.சி.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு கல்லூரி சார்பில் நல்லியகோடான் அரங்கில் அனைத்து பிரிவை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பித்திருந்த ஏராளமான மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், மாவட்ட பொருளாளர் திலீபன், திண்டிவனம் தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், நகர செயலாளர் இமயன், மாநில துணை செயலாளர் ஓவியர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கல்லூரி அலுவலர்களை சந்தித்து, காலியாக உள்ள இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் இல்லாததால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள், ஆதிதிராவிடர்கள் என இரு பிரிவிற்கும் சமமாக பிரித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கூறினர். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் கல்லூரி அலுவலர்களுக்கும், வி.சி.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கூட்ட அரங்கத்திற்குள் வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத படி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி அரசு விதிமுறைப்படி தான் அனைத்து பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது என்றார். இதனை ஏற்ற வி.சி.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்