திருவட்டத்துறைதீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-04-11 18:45 GMT

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த திருவட்ட துறையில் உள்ள பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 13-ம் ஆண்டு தொடங்கியுள்ளதையொட்டி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகர் பூஜை நடந்து, ருத்ர யாகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி போன்ற பொருட்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு, கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்