எட்டயபுரம் காளியம்மன் கோவில் வருசாபிஷேகம்
எட்டயபுரம் காளியம்மன் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் கோவில்பட்டி மெயின் ரோட்டில் பாரதியார் வணங்கி வழிபட்ட தேவி ஸ்ரீகாளியம்மன் கோவில், ஸ்ரீ கன்னிமூல கணபதி கோவில் 9-ம்ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. அதனை முன்னிட்டு நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கன்னிமூல கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும், தொடர்ந்து கணபதி பூஜை, பூர்ணகுபதி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருசாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இப் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு விபூதி, மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.