வெற்றி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
கோவில்பட்டி வெற்றி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இந்திராநகர் வெற்றி விநாயகர் கோவிலில் 33-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலையில் கணபதி பூஜை, சுத்தி புண்ணியாகவாசனம், கடங்கள் ஆவாஹனம், நவகிரக பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. காலையில் மகாபூர்ணாஹூதி, காலை 8.15 மணிக்கு வெற்றி விநாயகர் விமான கலச அபிஷேகம், காலை 10.30 மணிக்கு வெற்றி விநாயகருக்கு வருசாபிஷேக விழா மற்றும் கற்பூர ஆரத்தியுடன் நிறைவு பெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனைவி இந்திராகாந்தி, அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சுதா சுப்புலட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.