மகாசரபேஸ்வரர் பீடம் சார்பில் வரலட்சுமி விரத திருவிளக்கு பூஜை

நெமிலியில் மகாசரபேஸ்வரர் பீடம் சார்பில் வரலட்சுமி விரத திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-08-26 17:59 GMT

நெமிலி

நெமிலியில் மகாசரபேஸ்வரர் பீடம் சார்பில் வரலட்சுமி விரத திருவிளக்கு பூஜை நடந்தது.

நெமிலியில் அமைந்துள்ள ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயத்தில் கரியாகுடல் மகா சரபேஸ்வரர் பீடம் சார்பில் வரலட்சுமி விரத திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி சிவகாளி மோகனானந்த சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தனர். கரியாகுடல் மகா சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானபிரகாச சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

பூஜையில் வேதமந்திரங்கள் ஓதியபடி 201 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றினர். இதில் செங்குந்தர் சமுதாய பெருதனம் கே.ஆர்.நரசிம்மன், பொன்னியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜோதிவேல் மற்றும் சென்னை, பெங்களூரு, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்