சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள்
நவராத்திரி விழாவையொட்டி உப்புக்கோட்டை வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நவராத்திரி விழாவின் 7-வது நாளான நேற்று, உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் உலகளந்த பெருமாள் அலங்காரத்திலும், போடி திருமலாபுரம் பராசக்தி அம்மன் கோவிலில் அம்மன், ஆதிபராசக்தி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்